இதுதான் உண்மையான தேசபக்தி: வைரலாகும் அருமையான விடியோ

இன்று முதலே சுதந்திர தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்கள் தொடங்கி தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவிருக்கின்றன.
இதுதான் உண்மையான தேசபக்தி
இதுதான் உண்மையான தேசபக்தி
Published on
Updated on
1 min read

இதுதான் உண்மையான தேசபக்தி: வைரலாகும் அருமையான விடியோ

நாடு முழுவதும் 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிவிட்டன. பல இடங்களில் இன்று முதலே சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடங்கி தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவிருக்கின்றன.

எங்குப் பார்த்தாலும் தேசியக் கொடி பறக்கும் செய்திகளும் விடியோக்களும் புகைப்படங்களும் இணையம் முழுக்க நிறைந்து உள்ளது.

இந்த நிலையில், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதியைச் சேர்ந்த ஒய். சதீஷ்ரெட்டி, தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு விடியோ பகிர்ந்துள்ளார். தெலங்கானாவின் மிக முக்கிய வீதியொன்றில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஒரு அமைப்பினர், ஊர்வலம் செல்கிறார்கள். சாலையோரமாக அவர்கள் ஊர்வலம் செல்ல, அவர்களை கடந்தவாறு பல வாகனங்கள் பொறுமையாகச் செல்கின்றன. ஆனால், அந்தச் சாலையின் நடைபாதையில் நின்றிருக்கும் ஒரு முதியவர், தேசியக் கொடி ஊர்வலத்துக்கு மரியாதை செலுத்தும் முகமாக சல்யூட் அடித்தபடி நிற்கிறார். அந்த ஊர்வலம் அவரைக் கடந்து செல்லும் வரை அவர் அவ்வாறு நின்றிருக்கும் விடியோ, சமூக வலைத்தளத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

இதையும் படிக்க.. தேசியக் கொடி-செய்ய வேண்டியதும் கூடாததும்!

இந்த விடியோவை பகிர்ந்து, இதுதான் உண்மையான தேசபக்தி என்று பதிவிடப்பட்டுள்ளது.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் வீரத்துடன் பங்கேற்றவா்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை (ஆக. 13) முதல் திங்கள்கிழமை (ஆக. 15) வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

மத்திய அமைச்சா்கள், மாநில ஆளுநா்கள் உள்ளிட்டோரும் ‘வீடுதோறும் தேசியக்கொடி’ என்பதைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். 

குழந்தைகள், இளைஞா்கள் மத்தியிலும் வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றும் ஆா்வம் அதிகரித்துள்ளது. பல்வேறு அமைப்புகள், கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் என பல இடங்களில் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. இந்த நிலையில்தான், இந்த தேசியக் கொடி ஊர்வலத்துக்கு முதியவர் மரியாதை செலுத்தும் விடியோவும் பலரையும் கவர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com