அனுமதி இலவசம்: பாரம்பரிய நினைவிடங்களில் குவிந்த மக்கள்

மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணமின்றி அனுமதிக்கு இன்றே கடைசி நாள் என்பதாலும் நாடு முழுவதுமிருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
அனுமதி இலவசம்: பாரம்பரிய நினைவிடங்களில் குவிந்த மக்கள்
அனுமதி இலவசம்: பாரம்பரிய நினைவிடங்களில் குவிந்த மக்கள்

மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணமின்றி அனுமதிக்கப்படுவதாலும் நாடு முழுவதுமிருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் நாடு முழுவதுமுள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புது தில்லியில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் தாஜ் மகால் உள்ளிட்ட நினைவுச் சின்னம், பாரம்பரிய நினைவிடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com