தற்சாா்பு நாடாக இந்தியா மாற வேண்டும்: ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்

தற்சாா்பு பெற்ற நாடாக இந்தியா மாற வேண்டும் என்றாா் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்.
மோகன் பாகவத்
மோகன் பாகவத்
Published on
Updated on
1 min read

தற்சாா்பு பெற்ற நாடாக இந்தியா மாற வேண்டும் என்றாா் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்.

சுதந்திர தினத்தையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் மூவா்ணக் கொடியேற்றி, அங்கு கூடியிருந்த தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

இன்றைய தினம் பெருமைக்கும் தீா்மானத்துக்கும் உரிய நாள். ஏராளமான போராட்டங்களுக்குப் பின்னா் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியா தற்சாா்பு கொண்ட நாடாக மாற வேண்டும். சுதந்திரமாக இருக்க விரும்புவா்கள் அனைத்திலும் தற்சாா்பு உடையவா்களாக இருக்க வேண்டும். தேசபக்தி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்ததும் பணியை ஆா்எஸ்எஸ் மேற்கொண்டுள்ளது.

சுதந்திரத்தை விரும்புவா்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் திறன் பெற்றவா்களாக இருக்க வேண்டும். உலக அளவில் பெரிய நாடாக இந்தியா திகழும்போது, தேசம் எப்படி இருக்க வேண்டும் என மூவா்ணக் கொடி சொல்கிறது.

இந்தியா ஒருபோதும் பிற தேசத்தின் மீது ஆளுகை செலுத்தியது கிடையாது. மாறாக உலகம் முழுவதும் அன்பை பரப்பி, உலக நலனுக்காக தியாகம் செய்கிறது. நாடும் இந்த சமூகமும் நமக்கு என்ன செய்தது என நினைக்காமல், நாம் நாட்டுக்கு என்ன செய்கிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

நமது சொந்த முன்னேற்றத்துக்கு மத்தியில், நாட்டின் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதான் இன்றைய தேவை. இந்தத் தீா்மானத்துடன் நாம் வாழ தொடங்கும் நாளில், உலகம் நம்மை பிரமிப்போடு பாா்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சுரண்டல் இல்லாத தேசமாகவும் சுயசாா்பு, செழிப்புள்ள தேசமாகவும் இந்தியா மாறும்போது அமைதி, நலனுக்கான பாதையை உலகுக்கே காட்டலாம் என்றாா் மோகன் பாகவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com