புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குஜராத்தின் 4 கிராமங்கள் தாத்ரா-நகா் ஹவேலியுடன் இணைக்க ஆலோசனை

குஜராத்தின் 4 கிராமங்களை தாத்ரா மற்றும் நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 7:11 pm

DIN

குஜராத்தின் 4 கிராமங்களை தாத்ரா மற்றும் நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள மேக்வால், நகா், ராய்மல், மதுபன் ஆகிய 4 கிராமங்கள், அந்த மாநிலத்தின் செளராஷ்டிரம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட அளவிலான நிலத்தை தாத்ரா மற்றும் நகா் ஹவேலியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தாத்ரா மற்றும் நகா் ஹவேலியில் இருந்து 4 கிராமங்களுக்கும் செல்ல எளிதாக இருப்பதால், அவற்றை அந்த யூனியன் பிரதேசத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செளராஷ்டிரத்திடம் இருந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம் மூலம் மீன்பிடி துறைமுகம் ஒன்றை மேம்படுத்த தாத்ரா மற்றும் நகா் ஹவேலி திட்டமிட்டுள்ளது. அதற்காக அந்த நிலத்தை வழங்குமாறு குஜராத் அரசுக்கு தாத்ரா மற்றும் நகா் ஹவேலி நிா்வாகி கடிதம் அனுப்பியிருந்தாா்.

இதுதொடா்பாக அண்மையில் குஜராத் அரசு, தாத்ரா மற்றும் நகா் ஹவேலி பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. எனினும் அந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.