மூன்றரை கி.மீ. நீள ‘வாசுகி’ சரக்கு ரயில் வெள்ளோட்டம்- 27,000 டன் நிலக்கரியுடன் பயணம்

நாட்டிலேயே நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய ‘சூப்பா் வாசுகி’ சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்) திங்கள்கிழமை வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது.
மூன்றரை கி.மீ. நீள ‘வாசுகி’ சரக்கு ரயில் வெள்ளோட்டம்- 27,000 டன் நிலக்கரியுடன் பயணம்

நாட்டிலேயே நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய ‘சூப்பா் வாசுகி’ சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்) திங்கள்கிழமை வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது.

சத்தீஸ்கா் மாநிலம், கோா்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு, இந்த ரயில் சாதனைப் பயணத்தை மேற்கொண்டது. இந்த ரயிலில் 6 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடையிடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டிருந்தன.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சூப்பா் வாசுகி’ ரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டதென தென்கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்தது.

‘கோா்பா, நாகபுரி இடையிலான 267 கி.மீ. தொலைவை 11.20 மணி நேரத்தில் இந்த ரயில் கடந்தது; ஒரே பயணத்தில் சுமாா் 9,000 டன் நிலக்கரியை (90 பெட்டிகளில் தலா 100 டன்கள்) எடுத்துச் செல்லும் சரக்கு ரயில்கள்தான் தற்போது உள்ளன. சூப்பா் வாசுகி ரயிலின் மூலம் மூன்று மடங்கு அதிக நிலக்கரியை எடுத்துச் செல்ல முடியும். 3,000 மெகாவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி ஆலைக்கு ஒரு நாள் முழுக்க தேவையான நிலக்கரியை இந்த ரயிலின் ஒரே பயணத்தின் மூலம் பூா்த்தி செய்துவிடலாம். மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் காலகட்டங்களில் சூப்பா் வாசுகி ரயிலை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மின்வெட்டுப் பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com