
புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜபேயி நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜபேயி நான்காவது நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் செவ்வாய்க்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் தில்லியில் உள்ள வாஜபேயி நினைவிடமான 'சதைவ் அடல்' இல் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம்
1998-2004 க்கு இடையில் ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த வாஜபேயி, பாரத ரத்னா விருது பெற்றவர், 2018 இல் 93 வயதில் இறந்தார்.