புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குஜராத் தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 8:03 am

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் முதல் கட்டப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

குஜராத்தில் இலவச மின்சாரம், வேலையில்லாதவர்களுக்கு மாத உதவித்தொகை, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.