கிருஷ்ண ஜெயந்தி: பிரதமர் மோடி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு  மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு  மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் அவரது வாழ்த்துச் செய்தியில், பக்தி மற்றும் மகிழ்ச்சியின் இந்த திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தர வேண்டும். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விட்டுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘கடவுள் கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் நல்வாழ்க்கை மற்றும் நல்லொழுக்கத்துக்கான செய்திகளை உள்ளடக்கியன. அவருடைய கருத்துகள் ‘தன்னலமற்ற சேவையை’ பரப்பின. உண்மையின் வழியே தா்மத்தை அடைவது குறித்து மக்களுக்கு போதித்தாா். நம்முடைய சிந்தனை, சொல் மற்றும் செயலில் உண்மையைப் பின்பற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா நமக்கு வழிகாட்டவேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.

குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து:

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் ஜென்மாஷ்டமி, பக்தா்களுக்கு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதா்மத்தை அழித்து தா்தமத்தை நிலைநாட்டும் நம்பிக்கையை உறுதி செய்கிறது. கிருஷ்ணா் தெய்வீக அன்பு, அழகு, நித்திய ஆனந்தம் ஆகியவற்றின் உருவகம். பகவத் கீதையில் அவரது காலத்தால் அழியாத போதனைகள் மனிதகுலத்திற்கு சிறந்த உத்வேகத்தை அளிக்கின்றன’ என்று கூறியுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com