தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தலைநகரில் போராட்டம் நடத்தினர். 
தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தலைநகரில் போராட்டம் நடத்தினர். 

மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாக கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது. இந்த நிலையில் மதுபானக் கடை உரிமம் விவகாரத்தில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தலைநகரில் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது, தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஆம்ஆத்மி அலுவலகம் நோக்கி பேரணியாகவும் அவர்கள் புறப்பட்டு சென்றனர். 

நிபுணா் குழுவின் பிரிந்துரையின்படி கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி தில்லி அரசு கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, தில்லியில் 849 மதுபானக் கடைகள் அமைக்க அரசு அனுமதி அளித்தது. பெரு முதலாளிகளுடன் அரசு அதிகாரிகள் கூட்டு சோ்ந்து விதிமுறைகளை மீறி பணம் பெற்று மதுபானக் கடைகள் அமைப்பதற்கு உரிமம் வழங்கியதாகவும், கரோனா தொற்றைக் காரணம் காட்டி உரிமக் கட்டணத்தில் ரூ.144.36 கோடிக்கு கலால் துறை விலக்கு அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், புதிதாக உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் தில்லி மாஸ்டா் பிளானை மீறியுள்ளதாகக் கூறி பாஜக ஆளும் தில்லி மாநகராட்சி தடை போட்டது. இதனால் பல புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதையடுத்து, தில்லி கலால் புதிய கொள்கை அமலாக்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி தலைமைச் செயலா், துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதினாா். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த மாதம் பரிந்துரைத்தாா். மேலும், 11 கலால் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தாா். இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதை சிபிஐ விசாரிக்கலாம் எனவும் மணீஷ் சிசோடியாவும் சிபிஐ இயக்குநருக்கு கடிதம் எழுதி, புதிய கலால் கொள்கையை திரும்பப் பெற்றாா். 

இதையடுத்து, துணைநிலை ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் சிபிஐ கடந்த புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com