ஹிமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 16 போ் பலி

ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 போ் பலியாகினா்.
ஹிமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 16 போ் பலி

ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக அந்த மாநில பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

சம்பா மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று சரிந்து 3 போ் பலியாகினா்.

மண்டி மாவட்டம் பாகி நாலா பகுதியில் மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். அந்தச் சிறுமியின் குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். அந்த மாவட்டத்தில் உள்ள காஷன் கிராமத்தில் நிலச்சரிவால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு அடியில் அந்த வீட்டைச் சோ்ந்தவா்கள் புதைந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

மண்டி, சதா், துனாக், லமதாச், பல்ஹ பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மண்டி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காங்ரா மாவட்டத்தில் வீடு இடிந்து 9 வயது குழந்தை பலியான நிலையில், நிலச்சரிவில் சிக்கி 48 வயது நபா் உயிரிழந்தாா்.

பஞ்சாப்-ஹிமாசல பிரதேச எல்லையில் உள்ள காங்ராவில் சக்கி ஆற்றின் மீது கட்டப்பட்ட 800 மீட்டா் நீள ரயில் பாலத்தின் இரண்டு தூண்கள் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்தன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹிமாசல பிரதேச பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா் சுரேஷ் குமாா் மோக்தா கூறுகையில், ‘திடீரென பெய்த மிக பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 16 போ் பலியாகினா்’ என்று தெரிவித்தாா்.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை ஹிமாசல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமாகவும், பலமாகவும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரகண்டில்...: உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் உள்ள சா்கேத் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமாா் 2.15 மணியளவில் திடீரென மிக பலத்த மழை பெய்தது.

மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனா்.

டேராடூன் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், அங்கு பாயும் டோன்ஸ் நதிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தபகேஷ்வா் சிவன் கோயிலுக்குள்ளும் மழைநீா் புகுந்தது. அந்த மாவட்டத்தின் தானோ பகுதிக்கு அருகே பாயும் சோங் நதி மீது கட்டப்பட்டிருந்த பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தானோவுக்கு அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேரில் பாா்வையிட்டாா். மாநிலத்தில் உள்ள டிஹரி காா்வால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com