
சண்டீகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல்வர் ஆனதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை வைக்க உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட இருப்பதாக அறிவித்து இருந்தார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சண்டீகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இடையே நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.