'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில் திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் பங்கேற்கலாம்!

'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில் திருமணமான பெண்களும் குழந்தை பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம் என விதிகளை தளர்த்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. 
2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து
2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து

'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில் திருமணமான பெண்களும் குழந்தை பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம் என விதிகளை தளர்த்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. 

'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் பட்டம் பெற்றால் அந்த காலம் முழுவதும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற விதிகள் உள்ளன. 

இந்நிலையில், 'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டுவர அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, இந்த அழகிப் போட்டியில் திருமணமான பெண்களும் குழந்தை பெற்றுக்கொண்ட இளம் பெண்களும் கலந்துகொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக 'பாக்ஸ் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த விதிகள் நடப்பாண்டு முதலே கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

72வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகள் அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவுள்ளது. 2020ல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஆண்ட்ரியா மெசா, இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com