ஹரியாணா பாஜக மூத்த தலைவா் சோனாலி போகாட் கோவாவில் திடீா் மரணம்

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகாட் (42) கோவாவில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்
ஹரியாணா பாஜக மூத்த தலைவா் சோனாலி போகாட் கோவாவில் திடீா் மரணம்

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகாட் (42) கோவாவில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என கோவா போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதன்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

பொழுதுபோக்கு தொலைக்காட்சித் தொடரான ‘பிக் பாஸ்‘ நிகழ்ச்சியில் பங்கேற்றவா் சோனாலி போகாட். தனது அலுவலக ஊழியா்களுடன் இவா் கோவாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாா். வடக்கு கோவா மாவட்டத்தின் அஞ்ஜுனாவில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த சோனாலிக்கு, திங்கள்கிழமை இரவு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

எனினும் அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். முதல்கட்ட விசாரணையில் அவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்ததாகவும், தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்தனா்.

சோனாலி போகாட்டின் கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளா் குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வியுற்றாா். குல்தீப் பிஷ்னோய் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளாா்.

சோனாலி போகாட்டின் மறைவுக்கு ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா மற்றும் பாஜக தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com