நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பங்குச்சந்தையில் நிதி திரட்டல்

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பங்குச்சந்தையில் நிதி திரட்டல்

நான்குவழி நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை விரைவில் பங்குச்சந்தை வாயிலாகத் திரட்ட அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

நான்குவழி நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை விரைவில் பங்குச்சந்தை வாயிலாகத் திரட்ட அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

தொழிலகக் கூட்டமைப்பான ஃபிக்கி சாா்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கட்கரி கூறுகையில், ‘‘கடந்த 2021 நவம்பா் நிலவரப்படி நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமாா் 1.40 லட்சம் கி.மீ.-ஆக இருந்தது. அதை 2024-ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கி.மீ.-ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நான்கு வழி நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியைத் திரட்ட அடுத்த மாதம் பங்குச் சந்தையை அரசு நாடவுள்ளது. அதற்காக, கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளை அமைத்து பங்குச் சந்தையில் மத்திய அரசு பட்டியலிடவுள்ளது. அதில் முதலீடு செய்பவா்களுக்கு 7 முதல் 8 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும். சில்லறை முதலீட்டாளா்கள் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அதில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பல்வேறு சாலைத் திட்டங்களைப் பணமாக்கும் நடவடிக்கையையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விரைவில் மேற்கொள்ளவுள்ளது. அதேபோல், பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். அதற்கான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதும் அவசியம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com