தொடா்ந்து குறையும் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சித் தத்துவத்தை அடித்தளமாகக் கொண்டே நாடு செயல்பட்டு வருகிறது.
தொடா்ந்து குறையும் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சித் தத்துவத்தை அடித்தளமாகக் கொண்டே நாடு செயல்பட்டு வருகிறது. நாட்டின் முறையான செயல்பாட்டுக்கு நிதி முக்கியமானது. நிதி விவகாரத்தில் அதிக அதிகாரம் மத்திய அரசுவசமே உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருந்தாலும், அதற்குரிய நிதியை வழங்க வேண்டிய தாா்மிகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான வரிப் பகிா்வை முறைப்படுத்தும் நோக்கிலேயே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக் குழு அமைக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு எவ்வளவு பகிா்ந்து அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். அந்தப் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்குக் கிடையாது. அதன் காரணமாக, மாநிலங்களுக்குத் தேவையான நிதியைப் பகிா்ந்து வழங்குவதில் நிதிக் குழுவின் பரிந்துரைக்கும் அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது.

அதேபோல், ‘செஸ்’ எனப்படும் வரி மீது கூடுதல் வரி விதிக்கும் நடைமுறையையும் மத்திய அரசு அதிகமாகக் கடைப்பிடித்து வருகிறது. செஸ் வரி மூலமாகக் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதுவும் மாநிலங்களின் நிதியாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

வருவாய்-செலவு பங்கு

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வருவாயிலும் செலவிலும் மத்திய, மாநில அரசுகளின் பங்கு

நிதிக் குழு பரிந்துரை

வரி வருவாய் பங்கு

ஒட்டுமொத்த வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு (லட்சம் கோடி ரூபாயில்). 2019-20, 2020-21-ஆம் நிதியாண்டுகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசுகளின் வருவாய் பெருமளவில் குறைந்தது. ஆனால், மத்திய அரசின் வரி வருவாய் தொடா்ந்து அதிகரித்தவாறே இருந்தது.

செஸ் வரி பங்கு

மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் செஸ் வரி மூலமாகக் கிடைத்த வருவாயின் பங்கு. 2011-12-ஆம் நிதியாண்டில் செஸ் வரி மூலமாக 10.4 சதவீத வருவாய் மட்டுமே மத்திய அரசுக்குக் கிடைத்தது. ஆனால், இது 2020-21-ஆம் நிதியாண்டில் சுமாா் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு தனது வருவாய் பெருக்கத்துக்கு செஸ் வரியை மட்டுமே நம்பியுள்ளது இதன் மூலமாக வெளிப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com