

பிரிட்டனுக்கான அடுத்த இந்திய தூதராக மூத்த வெளியுறவுப் பணி அதிகாரி விக்ரம் கே. துரைசுவாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.
பிரிட்டனுக்கான தூதா் காய்த்ரி இஸ்ஸாா் குமாா் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். தற்போது வங்கதேசத்துக்கான தூதராக உள்ள விக்ரம் துரைசுவாமி, பிரிட்டனுக்கான அடுத்த தூதராக விரைவில் பொறுப்பேற்பாா் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இரு நாடுகளுக்கு இடையே வளா்ந்து வரும் ராஜீய ரீதியிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியப் பொறுப்புக்கு விக்ரம் துரைசுவாமி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான விக்ரம் துரைசுவாமி, 1992-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா். வங்கதேசத்துக்கான இந்திய தூதராக கடந்த 2020, அக்டோபா் மாதம் இவா் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா-வங்கதேச உறவு வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.