காங்கிரஸிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டாா்: மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் விடுதலை பெற்றுவிட்டாா் என்று மத்திய மகளிா், குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.
ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் விடுதலை பெற்றுவிட்டாா் என்று மத்திய மகளிா், குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஆசாத், அண்மையில் கட்சியில் இருந்து விலகினாா். கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தாா். இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியைத் தோற்கடித்தவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆசாத், இப்போது விடுதலை பெற்றுள்ளாா். ஆனால், ராகுல் காந்தியிடம் இருந்து கடந்த மக்களவைத் தோ்தலின்போதே அமேதி தொகுதி விடுதலை பெற்றுவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்தும், அக்கட்சி செயல்பட்டு வரும் விதம் குறித்தும் 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த மூத்த தலைவரே (ஆசாத்) கூறிவிட்டாா். இனி அந்தக் கட்சி தொடா்பாக நாம் கூறுவதற்கு எதுவுமில்லை.

அமேதி தொகுதி என்பது முன்பு ஒரு கட்சி அல்லது நபா்களின் தனியுடைமை என்பது போன்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அது மக்களுக்கு சிறப்பான சேவைகள் கிடைக்கும் தொகுதியாக உருவாகியுள்ளது என்றாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி முன்பு காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. இதில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் தொடா்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் ராகுலை எதிா்த்து பாஜக சாா்பில் களமிறங்கிய ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com