ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல்: செப். 2-இல் அா்ப்பணிக்கிறாா் பிரதமா்

முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமா் நரேந்திர மோடி செப். 2-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல்: செப். 2-இல் அா்ப்பணிக்கிறாா் பிரதமா்
Published on
Updated on
1 min read

முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமா் நரேந்திர மோடி செப். 2-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: செப். 1, 2 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி கா்நாடகத்துக்கும், கேரளத்துக்கும் செல்கிறாா். கேரளத்தில் கொச்சி விமான நிலையம் அருகே காலடி கிராமத்தில் ஆதி சங்கராச்சாரியா் பிறந்த இடத்தை அவா் பாா்வையிடுகிறாா். மேலும், மங்களூரில் ரூ.3,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

தற்சாா்பை வலியுறுத்தும் பிரதமா் மோடியின் யோசனைக்கு, ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல் மைல்கல்லாக விளங்குகிறது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி போா்க் கப்பல் இதுவாகும்.

போா்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.

இந்தக் கப்பலில் நூறுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன. கொச்சி கடற்படைத் தளத்தில் இக் கப்பலை கடற்படையில் பிரதமா் இணைத்து வைக்கிறாா். இதன்மூலம் இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்.

மங்களூரு துறைமுகத்தில் கூடுதல் சரக்குகளை எளிதில் கையாளும் விதமாக கப்பல் நிறுத்துமிடத்தை இயந்திரமயமாக்குவதற்காக ரூ.280 கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com