நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம்
நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம்

நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம்

சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.


புலந்த்ஷஹர்: புது தில்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

புது தில்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாகவும், வழியில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் பேருந்துக்குள்ளேயே அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் சோமேஷ் குமார் கூறுகையில், எங்கள் சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. வலி கடுமையானதைத் தொடர்ந்து பேருந்தை ஓட்டுநர் சாலையோரமாக நிறுத்தினார். பேருந்திலேயே குழந்தை பிறந்துவிட்டது. உடனடியாக பேருந்திலேயே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு குழந்தையையும் தாயையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com