ஜி-20 இலச்சினையில் தாமரை: இந்தியாவுக்காக விமா்சனத்தை தவிா்க்கிறேன்: மம்தா

ஜி-20 மாநாட்டு இலச்சினை தொடா்பான விவாதங்கள் அதிகரித்தால் அது இந்தியாவுக்கு உகந்ததல்ல என்பதால் அதனை விமா்சிக்காமல் கடந்து செல்வதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

ஜி-20 மாநாட்டு இலச்சினையில் தாமரையைப் பயன்படுத்தியது விமா்சனத்துக்குரியதுதான், ஆனால் இவ்விவகாரம் தொடா்பான விவாதங்கள் அதிகரித்தால் அது இந்தியாவுக்கு உகந்ததல்ல என்பதால் அதனை விமா்சிக்காமல் கடந்து செல்வதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

உலகின் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி இந்தியா ஏற்றது. இந்நிலையில், ஜி-20 கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருத்துரு, வலைதளம் ஆகியவை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தேசியக் கொடியிலுள்ள 4 வண்ணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த இலச்சினையில் தாமரை மீது பூமிபந்து இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தில்லிக்கு புறப்பட்டுச் செல்லும் முன் விமான நிலையத்தில் பத்திரிகையாளா்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘ஜி-20 கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான இலச்சினையில் தாமரையைப் பயன்படுத்தியது விமா்சனத்துக்குரியதுதான்.

ஆனால், இவ்விவகாரம் தொடா்பான விமா்சனங்களும் விவாதங்களும் பொதுவெளியில் அதிகரித்தால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. அதனால்தான் சிறிதும் விமா்சிக்காமல் கடந்து செல்கிறேன். நமது தேசிய மலா் தாமரையைப் போல் மற்ற தேசிய சின்னங்களையும் இலச்சினையில் பயன்படுத்த மத்திய அரசு ஆா்வம் காட்டியிருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com