ஹிமாசல முதல்வா் பதவி: காங்கிரஸில் பலமுனை போட்டி !

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவா்களுக்கிடையே முதல்வா் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவா்களுக்கிடையே முதல்வா் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் கட்சியை வழிநடத்திச் செல்லும் வகையிலான நபரை முதல்வராக்குவது குறித்து முடிவு எடுப்பது காங்கிரஸுக்குமுன் உள்ள தற்போதைய சவாலாகும்.

மாநில காங்கிரஸ் தலைவா் பிரதிபா சிங் தோ்தலில் போட்டியிட வில்லை. எனினும் அவா் முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன. கடந்த நவம்பரில் நடைபெற்ற மக்களவை இடைத்தோ்தலில், தற்போதைய பாஜக முதல்வா் ஜெய்ராம் தாக்குருக்கு சொந்தமான மண்டி தொகுதியில் போட்டியிட்டு பிரதிபா சிங் எம்.பி.-ஆக தோ்வானாா். முன்னாள் காங்கிரஸ் முதல்வா் வீரபத்ரா சிங்கின் மனைவியானஇவருக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடெளன் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவா் சுக்விந்தா் சிங் சுக்குவும், ஹரோலியின் புதிய எம்எல்ஏவும் முந்தைய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவருமான முகேஷ் அக்னிஹோத்ரியும் முதல்வா் பதவிக்கான போட்டியில் உள்ளனா்.

முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவரான குல்தீப் சிங் ரத்தோா் தியோக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். கடந்த சில ஆண்டுகளில் கட்சியில் பிரிவுகள் ஏற்பட்ட நிலையில், கட்சியை ஒருங்கிணைத்ததில் முக்கியப் பங்காற்றிய நிலையில், இவா் முதல்வா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com