குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 8) காலை முதலே தொடங்கியது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் அளவில் வெற்றி பெற்று பாஜக 7ஆவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வேகமான வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகம் போன்ற காரணங்களினாலேயே அதிக அளவிலான குஜராத் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.