குஜராத்தின் தேர்தல் முடிவுகளைப் போலவே தெலங்கானாவிலும் பாஜக ஆட்சியமைக்கும் என தெலங்கானா மாநில பாஜகத் தலைவர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா குடும்ப ஆட்சி செய்து வருவதாகவும், மக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இது மாபெரும் வெற்றியாகும். பலர் பாஜகவின் புகழை கெடுக்க நினைத்தபோதிலும் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி குஜராத் மாடல் குறித்து அங்கு என்ன வளர்ச்சி இருக்கிறது என்று கேட்பார். அவர் இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு குஜராத்தின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்.
தெலங்கானாவில் அண்மையில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கோடிக்கணக்கின் பணத்தினை செலவு செய்து வெற்றி பெற்றது. தெலங்கானாவின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு என்பது தவிர்க்க முடியாதது. மக்கள் லஞ்சமற்ற மற்றும் குடும்ப ஆட்சியில்லாத நிலையை மாநிலத்தில் விரும்புகிறார்கள். அதனை பாஜகவால் மட்டுமே தர முடியும். குஜராத் தேர்தலின் முடிவினைப் போன்ற முடிவையே தெலங்கானாவும் சந்திக்கும். மக்கள் ஆளும் சந்திரசேகர் ராவ் அரசுக்கு எதிராக உள்ளனர் என்றார்.
இதையும் படிக்க: குஜராத் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ராஜிநாமா
கடந்த சில ஆண்டுகளாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க பாஜக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மார்ச் 16-ல் தமிழகம், கேரளம், மே.வங்கம் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு?

பிரதமர் மோடி நாளை அசாம் செல்கிறார்! ரூ.48,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

சிலிண்டர் தட்டுப்பாடு! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி CPIM ஆர்ப்பாட்டம்!
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத சமூகம் நாகரீக சமுதாயமாக இருக்க முடியாது: கமல்ஹாசன்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

