சோனியா பிறந்தநாள்: வெல்லமுடியாத தலைமை என்று பாராட்டிய கார்கே!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு "வெல்லமுடியாத தலைமை" என்று மல்லிகார்ஜுன் கார்கே பாராட்டியுள்ளார்.
சோனியா பிறந்தநாள்: வெல்லமுடியாத தலைமை என்று பாராட்டிய கார்கே!
சோனியா பிறந்தநாள்: வெல்லமுடியாத தலைமை என்று பாராட்டிய கார்கே!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு "வெல்லமுடியாத தலைமை" என்று மல்லிகார்ஜுன கார்கே பாராட்டியுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே தனது சுட்டுரையில், 

முன்னாள் காங்கிரஸ் தலைவரான திருமதி சோனியாவுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 

அவரது கருணை, அர்ப்பணிப்பு, வெல்லமுடியாத தலைமை, கண்ணியம், தியாகம், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. 

அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். அவருடைய கடமை உணர்வும் கருணையும் ஒரு உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார். 

கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் சசி தரூர் உள்பட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் முன்னாள் தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சோனியா தனது 76வது பிறந்தநாளை, ராகுல் மற்றும் பிரியங்காவுடன் நேரத்தை செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com