குஜராத் அமைச்சரவையில் இடம்பெறுவாரா ஹார்திக் படேல்?

குஜராத் முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், ஹார்திக் படேலுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹார்திக் படேல்(கோப்புப்படம்)
ஹார்திக் படேல்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

குஜராத் முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், ஹார்திக் படேலுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில், 156 இடங்களில் வென்று, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.

இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக பூபேந்திர படேல் (60) இன்று பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்கவுள்ளாா். படேலுடன் சில அமைச்சா்களும் பதவியேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸின் குஜராத் மாநில செயல் தலைவராக இருந்து அக்கட்சியிலிருந்து விலகி தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்த ஹார்திக் படேலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸில் முக்கிய தலைவராக வலம் வந்த ஹார்திக் படேலுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஹார்திக் படேல் கூறுகையில், “நான் மிகவும் இளமையான எம்.எல்.ஏ. கட்சிக்காக உழைக்க வேண்டும் என்பதிலேயே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டுமென்று பாஜக முடிவு செய்யும். கட்சி எந்த பொறுப்பு கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com