பில்கிஸ் பானு வழக்கு மறுசீராய்வு மனு: விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலனை

பில்கிஸ் பானு வழக்கு மறுசீராய்வு மனு: விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலனை

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 11 குற்றவாளிகள் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளது குறித்து பரிசீலன

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 11 குற்றவாளிகள் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளது குறித்து பரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

கோத்ரா ரயில் எரிப்பைத் தொடா்ந்து நிகழ்ந்த குஜாரத் வன்முறை சம்பவத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரது குடும்ப உறுப்பினா்கள் 7 பேரும் கொலை செய்யப்பட்டனா்.

தண்டனைக் காலம் முடியும் முன் தங்களை விடுதலை செய்யக்கோரி இக்குற்றத்தில் தொடா்புடைய 11 குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பரிசீலனை செய்யுமாறு குஜராத் மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனா். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தது.

மற்றொரு மனு விசாரணை:

தண்டனைக் காலம் முடியும் முன்பாக குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்தது தொடா்பான குஜராத் மாநில அரசின் முடிவுக்கு எதிராக மற்றொரு மனுவையும் உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வுக்குமுன் செவ்வாய்க்கிழமை (டிச.13) விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2002-இல் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. பில்கிஸ் பானு தொடா்பான வழக்கில் குற்றவாளிகளுக்கு 2008-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தனா். அவா்களின் கருணை மனு அடிப்படையில் இவ்வாண்டு ஆகஸ்டில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com