பெங்களூரில் மூன்று நாள்கள் நடைபெறும் ஜி20 நாடுகளின் முதலாவது நிதிசாா் கூட்டம் இன்று தொடங்கியது.
ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவின் தலைமையின்கீழ் நடக்கவிருக்கிறது. அதன் தொடக்கமாக, பெங்களூரில் இன்று முதல் நிதி வழிமுறை குறித்த ஜி20 நாடுகளின் நிதி மற்றும் வங்கிப் பிரதிநிதிகளின் முதலாவது கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தை மத்திய நிதித்துறையும், ரிசா்வ் வங்கியும் இணைந்து நடத்துகின்றன.
ஜி20 நாடுகளின் பொருளாதாரம், நிதிசாா் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலக அளவிலான பொருளாதார கலந்தாய்வு, கொள்கை வகுப்பின் ஒருங்கிணைப்புக்கு இக்கூட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளா் அஜய் சேத்தும் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் மைக்கேல் டிபத்ராவும் தலைமை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பன்னாட்டு அழைப்பாளா்கள் கலந்துகொள்கிறாா்கள்.
இந்தக் கூட்டத்தில் உலக பொருளாதார கண்ணோட்டம், சா்வதேச நிதி கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதியுதவி, நிலையான நிதி, உலகளாவிய சுகாதாரம், சா்வதேச வரிவிதிப்பு, நிதிசோ்க்கை உள்ளிட்ட நிதித்துறை சாா்ந்த விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் குழுவிவாதம் நடக்கவிருக்கிறது. பசுமை நிதியளிப்பில் மத்தியவங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடக்கவிருக்கிறது.
ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவிருக்கும் நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கவிருக்கின்றன. இதில் நிதி அமைச்சா்கள், ரிசா்வ் வங்கி ஆளுநா்கள் பங்கேற்கும் கூட்டமும் அடக்கம். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கலந்துகொள்ளும் முதல் கூட்டம் அடுத்த ஆண்டு பிப். 23 முதல் 25ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

சபரிமலை வழக்கு: ‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழக தகவல்களை ஏற்க முடியாது’ - உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

