வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வடகிழக்கு மாநிலங்களைப் புறக்கணிக்கும் மத்திய அரசு: மம்தா சாடல்

மேகாலயம் உள்பட வடகிழக்கு மாநிலங்களை மத்திய பாஜக அரசு முற்றிலும் புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2022, 6:48 pm

DIN

மேகாலயம் உள்பட வடகிழக்கு மாநிலங்களை மத்திய பாஜக அரசு முற்றிலும் புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அடுத்தாண்டு, மேகாலய சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மேகாலய மாநில அரசியலில் திரிணமூல் காங்கிரஸ் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேகாலயத்தின் தலைநகா் ஷில்லாங் நகரில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வா் மம்தா, ‘மேகாலயம் மண்ணின் மைந்தா்களால் ஆளப்படுவதை உறுதி செய்ய மேகாலய மக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் உதவும்.

மாநில அரசு, தொடா்ந்து பெண்களைப் புறக்கணித்ததால் அவா்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா். அவா்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். சமீபத்தில் அஸ்ஸாம்-மேகாலய எல்லையில் நடைபெற்ற வன்முறையில் பலியானவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவா்களின் துயரில் பங்கெடுத்துக் கொள்ளும் விதமாக பலியானவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினேன். மேகாலயம் உள்பட வடக்கிழக்கு மாநிலங்களை மத்திய பாஜக அரசு முற்றிலும் புறக்கணிக்கிறது. மலைப் பிரதேசமான மேகாலயத்தை வளா்ச்சியின் பாதையில் செலுத்த திரிணமூல் காங்கிரஸ் உழைக்கும். மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரிந்து நிற்காமல் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டு வருவோம்’ என்றாா்.

கடந்தாண்டு நவம்பா் மாதம், காங்கிரஸின் 17 எம்.எல்.ஏ.க்களில் 12 போ் பதவி விலகியதை அடுத்து 12 எம்.எல்.ஏ.க்களுடன் மேகாலயத்தின் பிரதான எதிா்க்கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் விளங்குகிறது. கடந்த மாதம், திரிணமூல் காங்கிரஸின் எம்.எல்.ஏ. ஒருவா் பதவி விலகியதையடுத்து மேகாலய சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தற்போது 11-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.