இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த அக்.1-ஆம் தேதி முதல் 5ஜி சேவையைத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
கடந்த நவ.26-ஆம் தேதி நிலவரப்படி 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இச்சேவை தொடங்கப்படவுள்ளது. சில நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நகரங்களில் விரைவில் 5ஜி சேவை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும் இந்தியாவின் 50 நகரங்கள்:
தமிழ்நாடு: சென்னை
தில்லி: தில்லி
மகாராஷ்டிரம்: மும்பை, நாக்பூர், புணே
மேற்கு வங்கம்: கொல்கத்தா, சிலிகுரி
உத்தரப் பிரதேசம்: வாராணசி, லக்னெள
கர்நாடகம்: பெங்களூரு
தெலங்கானா: ஹைதராபாத்
ராஜஸ்தான்: ஜெய்ப்பூர்
ஹரியாணா: பானிபட்
அசாம்: கெளஹாத்தி
கேரளம்: கொச்சி
பிகார்: பாட்னா
ஆந்திரம்: விசாகப்பட்டினம்,
குஜராத்: அகமதாபாத், காந்திநகர், பாவ்நகர், மெசானா, ராஜ்கோட், சூரத், வதோதரா, அமரெலி, போடாட், ஜுனகாத், போர்பந்தர், ஹிமத்நகர், மோடாசா, பாலன்பூர், பதான், பூஜ், ஜாம் நகர், கம்பாலியா, மோர்வி, வாத்வான், பாருச், நவ்சாரி, ராஜ்பிப்லா, வல்சாத், வியாரா, அனாந்த், சோட்டா உதய்பூர், தோஹாட், கோத்ரா, லூனாவாடா, நடியாத்.
5ஜி சேவை வழங்கப்படும் நாட்டின் 50 நகரங்களில் 30 நகரங்கள் குஜராத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.