உஜ்ஜைனியின் மகாகல் லோக்கில் 5ஜி மொபைல் இணையச் சேவையை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக உஜ்ஜை ஆட்சியர் கூறுகையில், மகாகல் மகாலோக்கில் இருந்து 5ஜி இணையச் சேவைகள் தொடங்கப்படும் என்று முதல்வர் சௌஹான் அறிவித்துள்ளார்.
அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.
மஹாகல் லோக்கில் 5ஜி இணையச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள மத மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் 5ஜி சேவை இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.