ராகுல் காந்தி நடைப்பயணத்தில் ரகுராம் ராஜன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை பங்கேற்றார்.
ராகுல் காந்தி நடைப்பயணத்தில் ரகுராம் ராஜன்
ராகுல் காந்தி நடைப்பயணத்தில் ரகுராம் ராஜன்
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை பங்கேற்றார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து 98-வது நாளாக ராஜஸ்தானில் நடைபெற்று வருகின்றது.

இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மாநில தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் - நடிகைகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் ரகுராம் ராஜன் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவளித்துள்ளார்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 100 நாள்களை கடந்து சாதனை படைக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com