சிறுமியிடம் பாலியல் சீண்டல்: தலைமை ஆசிரியரைப் புரட்டியெடுத்த மாணவிகள்! (விடியோ)

கர்நாடகத்தில் பள்ளி மாணவியிடம் விடுதியில் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை, மாணவிகள் கட்டையால் தாக்கி விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 
தலைமையாசிரியரைத் தாக்கும் மாணவிகள்
தலைமையாசிரியரைத் தாக்கும் மாணவிகள்


கர்நாடகத்தில் அரசுப் பள்ளி விடுதியில் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை, மாணவிகள் கட்டையால் தாக்கி விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அத்துமீறலில் ஈடுபட்ட தலைமையாசிரியரை விடுதி வளாகத்தில் மாணவிகள் கட்டைகளைக் கொண்டு தாக்கி விரட்டியடிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் செயல்பட்டு வரும் கட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்துள்ளார். 

அங்கு பள்ளி மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், விழிப்படைந்த மாணவி, சக மாணவிகளை கூச்சலிட்டு அழைத்துள்ளார். 

அதற்குள் பள்ளி வகுப்பறையில் நுழைந்து தலைமையாசிரியர் கதவைத் தாழிட முயன்றுள்ளார். அப்போது கைகளில் கட்டையுடன் குவிந்த மாணவிகள் தலைமையாசிரியரை வகுப்பறையிலிருந்து வெளியே இழுத்துவந்து தாக்கினர்.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி விடுதிக்கு வந்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் தலைமையாசிரியரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அவர் பல மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவிகள் விடுதியில் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்ட தலைமையாசிரியரை பள்ளி மாணவிகள் தாக்கி விரட்டியடித்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தலைமையாசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com