25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர்: சமூக ஊடகத்தினால் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பேச்சுக் குறைபாடு உடைய மனிதர் சமூக ஊடகத்தின் மூலம் 60 வயதில் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். 
25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர்: சமூக ஊடகத்தினால் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
Published on
Updated on
1 min read

25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பேச்சுக் குறைபாடு உடைய மனிதர் சமூக ஊடகத்தின் மூலம் 60 வயதில் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.


சமூக ஊடகமும், அவரது கையில் போடப்பட்டிருந்த டாட்டூவும் அவரை அடையாளம் காண உதவியாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் அஸாம்கார்க் பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஜிலாஜீத் மௌர்யா பேச்சுக் குறைபாடு உடையவர். அவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் 1-ல் பூஜை ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்ப உறுப்பினர்களுடன் சென்றபோது காணாமல் போயுள்ளார். காணாமல் போன போது ஜிலாஜீத் மௌர்யாவுக்கு வயது 35 ஆகும். அவர் தற்போது சமூக ஊடகத்தின் உதவியாலும் மற்றும் அவரது கையில் போடப்பட்டிருந்த டாட்டூவின் உதவியாலும் மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும்  அந்தப் பகுதியில் உள்ள மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

காணாமல் போன ஜிலாஜீத் மௌரியாவின் உறவினர் சந்திரசேகர் மௌரியா பேசியதாவது: காணாமல் போன ஜிலாஜீத் மௌரியா என்னுடைய மாமா. அவர் காணாமல் போனதிலிருந்து எங்களது குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் அவரைத் தேடினோம். இருப்பினும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், அவர் எங்களுக்கு மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கை  குறைந்துவிட்டது.

இந்த சூழலில் எனது மாமா அமேதி எனும் கிராமத்தில் இருப்பதாக சமூக ஊடகங்களின் மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அங்கு சென்று பார்த்தபோது எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. சமூக ஊடகங்களில் மீண்டும் அவர் ராய் பரேலியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது எனது மாமா அங்கு இருந்தார். அவரைக் கண்ட பிறகு நாங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியடைந்தோம். அவரும் என்னைப் பார்த்த உடனே அடையாளம் கண்டு கட்டியணைத்து தனது பாசத்தினை வெளிப்படுத்தினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்ததால் எங்களாலும், அவராலும் அவரது கண்களில் பெருகும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த ஜிலாஜீத் மௌரியாவை சந்திக்க அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அவரது இல்லத்துக்கு வந்த வண்ணமே உள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com