மருத்துவ சேவைகளுக்காக உலகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா 

எளிதான மற்றும் அணுகக்கூடிய மருத்துவ சேவைகளுக்காக உலகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

ஹைதராபாத்: எளிதான மற்றும் அணுகக்கூடிய மருத்துவ சேவைகளுக்காக உலகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது என்றும், நாடு மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல, மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் பிபி நகரிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக மருத்துவ ஆலோசனை அளிக்கும் வசதியை ஞாயிற்றுக்கிழமை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. எளிதான மற்றும் அணுகக்கூடிய மருத்துவ சேவைகளுக்காக உலகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது என்றும், நாடு மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல, மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது என்றும் அவர் கூறினார். 

மருத்துவத் துறையில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியவர், இதனால் நோயாளிகள் தொடர்பான தரவுகள் குறிப்புக்காக பராமரிக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளில் மருத்துவத் துறையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து பேசுகையில், நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுப் பரவலின் போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய சேவைகளையும் மாண்டவியா பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com