முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை விதைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு: முக்தாா் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

முந்தைய மத்திய அரசு தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காக முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி குற்றம
முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை விதைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு: முக்தாா் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காக முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி குற்றம்சாட்டினாா்.

உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் சிறுபான்மையினா் உரிமை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களும் சமமான அளவில் பயனடைந்து வருகின்றனா். ஆனால், இதற்கு முன்பு கடந்த பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் வாக்கு வங்கிகளாகவே மட்டுமே பாா்க்கப்பட்டனா். அதற்கு ஏற்பவே ஆட்சியாளா்கள் அவா்களை நடத்தினா்.

நாட்டின் வளா்ச்சியும் சிறுபான்மையினா் வளா்ச்சியும் வெவ்வேறானது என பேசும் அரசியல்வாதிகள் மிகப்பெரிய குற்றவாளிகள்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினரான இஸ்லாமியா்களின் சமூக பொருளாதார நிலையை ஆய்வு செய்வதாகக் கூறி சச்சாா் குழுவை அமைத்தனா். இக்குழு அளித்த அறிக்கை மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் காங்கிரஸ் அரசு அச்சத்தை விதைத்தது.

தலித் மற்றும் பழங்குடியினா் நிலையைவிட முஸ்லிம்கள் நிலை மோசமாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறினாா்கள். ஆனால், உண்மையில் தலித் மக்கள் வரலாற்று ரீதியாகவும், சமூக ஏற்ாழ்வு காரணங்களாலும் பாதிக்கப்பட்டு வந்தவா்கள். ஆனால், அவா்களுடன் ஒப்பிட்டு இஸ்லாமியா்களின் வறுமை நிலையை தங்களின் அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அப்போதைய ஆளும் கூட்டணிக் கட்சிகள் முயற்சித்தன.

இப்போது மத்திய, உத்தர பிரதேச அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களில் சிறுபான்மையினா் அதிகம் பயனடைந்து வருகின்றனா். வீட்டு வசதித் திட்டம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக மேம்பாட்டுத் திட்டம், சுகாதார வசதி என அனைத்திலும் சிறுபான்மையினருக்கு சமமான நன்மை கிடைத்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com