2025 வரை குத்தகைக்கு விடப்பட்ட 25 விமான நிலையங்கள்: மத்திய அரசு

25 விமான நிலையங்கள், 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றதில் தெரிவித்துள்ளது.
2025 வரை குத்தகைக்கு விடப்பட்ட 25 விமான நிலையங்கள்: மத்திய அரசு
2025 வரை குத்தகைக்கு விடப்பட்ட 25 விமான நிலையங்கள்: மத்திய அரசு

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விமான நிலையங்களில் இதுவரை 25 விமான நிலையங்கள், 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றதில் தெரிவித்துள்ளது.

தேசிய பணமாக்கக் கொள்கையின் அடிப்படையல், இந்திய விமான நிலையக் கழகத்துக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, திருப்பதி, வாராணசி, போபால், சூரத், மதுரை, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 - 25ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் இன்று விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

இது தவிர, இந்திய விமான நிலையக் கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்பட  8 விமான நிலையங்களை பொதுத் துறை - தனியார் கூட்டமைப்பில் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நீண்டகாலத்துக்கு மேற்கொள்ளும் வகையிலான குத்தகையில் இயக்கி வருகிறது.

விமான நிலையங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் வரும் வருவாயை, மத்திய அரசு நாடு முழுவதும் விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளுக்காக செலவிட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com