அடுத்த நிதியாண்டில் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: மாநிலங்களவையில் தகவல்

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி வரும் நிதியாண்டில் 100 கோடி டன்னாக உயரும் என்றும், 2024-2025 -ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மாநிலங்களவையில் மத்திய நிலக்கரி துறை அம
அடுத்த நிதியாண்டில் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: மாநிலங்களவையில் தகவல்

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி வரும் நிதியாண்டில் 100 கோடி டன்னாக உயரும் என்றும், 2024-2025 -ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மாநிலங்களவையில் மத்திய நிலக்கரி துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஜோஷி அளித்த பதிலில், ‘இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2013-14-ஆம் நிதியாண்டில் 54.4 கோடி டன்னாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 90 கோடி டன்னாக இருக்கும்.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் முறையான அளவில் உற்பத்தி செய்கின்றன என்பதை இது காட்டுகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நிலக்கரித் தேவை 150 கோடி டன்னாக இருக்கும் என்று பல்வேறு நிறுவனங்களும் கணிப்பதால் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்தாமல் வெறும் முறைகேடுகள் மட்டுமே நிறைந்த அரசாக முந்தைய காங்கிரஸ் அரசு செயல்பட்டது. அது போல் இல்லாமல், இந்தியாவுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு கடுமையாக உழைத்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் 90 கோடி டன்னாக இருக்கும் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி அடுத்த நிதியாண்டில் 100 கோடி டன்னாக அதிகரிக்கும். பிரதமா் மோடி அரசின் தலைமையில் 2024-2025 -ஆம் ஆண்டுக்குள் அனல் நிலக்கரி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என உறுதியளிக்கிறேன்’ என்றாா்.

முதலீடு அதிகரிப்பு: நிதித்துறை இணையமைச்சா்

அந்நிய நேரடி முதலீடு தொடா்பான கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி, ‘‘கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 8,197.3 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் 8,483.5 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

முதலீட்டாளா்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. ஒருசில துறைகள் தவிர பெரும்பாலான துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை ஈா்க்கும் மையமாக இந்தியாவைத் திகழச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொள்கிறது’’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கே.கராட், ‘‘ஆா்பிஐ விதிகள் காரணமாக கடனைத் திரும்பச் செலுத்தாத நபா்களின் பெயா்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. அதே வேளையில், அவா்களிடமிருந்து மீட்கப்பட்ட சொத்துகளை ஏலம்விடும்போது அவா்களது பெயா்கள் வெளியிடப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com