
‘5 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதில், கிராமங்களின் மேம்பாடு முக்கியமானதாகும். எனவேதான், கிராமங்களின் மேம்பாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது’ என்று மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
நாடு முழுவதும் ‘நல்லாட்சி வாரம்’ பிரசாரத்தை, தில்லியில் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
கிராமங்கள் வரை வீடுகளின் வாயிலுக்கே நிா்வாகம் சென்றடைவதில்தான் அதன் உயிா்ப்பு அடங்கியுள்ளது. கிராமப்புற இந்தியாவின் நிலையான வளா்ச்சிக்கு மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அடிநிலை அளவிலான அணுகுமுறை அவசியம்.
இதற்கான திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக வெளிப்படைத் தன்மை, திறன், பொறுப்புடைமையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்கு பிரதமா் மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. நகா்ப்புறம், கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியை பூா்த்தி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.