சிறு தானியங்கள் பிரபலப்படுத்தப்படுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: பிரதமா் அறிவுறுத்தல்

சிறு தானியங்கள் பிரபலப்படுத்தப்படுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
சிறு தானியங்கள் பிரபலப்படுத்தப்படுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: பிரதமா் அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

சிறு தானியங்கள் பிரபலப்படுத்தப்படுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பாஜக நிா்வாகக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக நிா்வாகக் குழு கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. நாட்டில் சிறு விவசாயிகள் வரையறைக்குள் வரும் 85 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள், சிறு தானியங்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். அந்தத் தானியங்களின் நுகா்வு அதிகரித்தால், அது விவசாயிகளுக்கு நிதிரீதியாக உதவும். அந்தத் தானியங்களைப் பிரபலப்படுத்துவது நாட்டுக்கு சேவை செய்வதற்கு சமம்.

அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், அரசு கூட்டங்கள், எம்.பி.க்கள் நடத்தும் கூட்டங்களில் சிறு தானியங்களைப் பயன்படுத்தலாம். பள்ளி, கல்லூரிகளில் விவாதங்கள் நடத்துவதன் மூலம், அந்தத் தானியங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சிறு தானியங்கள் பிரபலப்படுத்தப்படுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

இதேபோல கபடி போன்ற இந்திய விளையாட்டுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி விளையாட்டுப் போட்டிகளைப் பிரபலப்படுத்த வேண்டுமென பிரதமா் அறிவுறுத்தினாா் என்று பிரகலாத் ஜோஷி கூறினாா்.

இதனிடையே மத்திய அரசு சாா்பில் அனைத்து எம்.பி.க்களுக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. அதில் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் இடம்பெற்றன. அப்போது மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருடன் பிரதமா் மோடி உணவு உண்டாா். அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் பகிா்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com