

பஞ்சாப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் விமானம் வருவதும் அதனை எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 7.20 மணியளவில் பஞ்சாப் அமிர்தசரஸ் செக்டார் பகுதியில் பரோபல் கிராமத்தின் அருகே பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் பறந்தது. உடனடியாக எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர்.
இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.