புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி: மகாராஷ்டிர துணை முதல்வர் மனைவி

நாட்டிற்கு இரண்டு தந்தைகள் இருப்பதாகவும் புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி எனவும் மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
அம்ருதா ஃபட்னவீஸ்
அம்ருதா ஃபட்னவீஸ்

நாட்டிற்கு இரண்டு தந்தைகள் இருப்பதாகவும் புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி எனவும் மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

2019ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடியோவைப் பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தந்தை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், இந்த வாரம் நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய  அம்ருதா, பிரதமர் மோடியை தேசத்தின் தந்தை (ராஷ்டிர-பிதா) என்று அழைத்தீர்களென்றால், காந்தியை என்னவென்று அழைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மகாத்மா காந்தி இந்தியாவின் தந்தை, பிரதமர் நரேந்திர மோடி புதிய இந்தியாவின் தந்தை. ஒருவர் அந்த தலைமுறை, மற்றொருவர் இந்தத் தலைமுறை எனவும் சுட்டிக்காட்டினார். அவரின் இந்த பேச்சுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com