திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்: நாளை முதல் முன்பதிவு

வைகுண்ட ஏகாதசியையொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறப்பு நிகழ்ச்சி பக்தர்கள் தரிசனத்துக்கான முன்பதிவு நாளை (டிச.22) முதல் தொடங்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி (கோப்புப் படம்)
திருப்பதி (கோப்புப் படம்)

வைகுண்ட ஏகாதசியையொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறப்பு நிகழ்ச்சி பக்தர்கள் தரிசனத்துக்கான முன்பதிவு நாளை (டிச.22) முதல் தொடங்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் என வருகிற 22ஆம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக வாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10 ஆயிரம் நன்கொடையாக அளித்து 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். 

இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரையும் மகா லகு தரிசனம் செய்து அனுப்பி வைக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com