
ஆதரவற்ற ஏழைகள் இரவு தங்குமிடங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்து வரும் சூழலில் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் அதிகாமவே உள்ளது.
இதன் காரணமாக, ஆதரவற்றவர்கள் இரவு தங்குமிடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற கரோனா நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில அரசின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் குளிரில் இருந்து மக்களைப் பாதுகாக்க இரவு நேர தங்குமிடங்களில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
நகராட்சி ஆணையர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி இயக்குனர் நேஹா சர்மா தெரிவித்தார்.
மேலும் இயக்குனரகத்தின் கூகுள் இணைப்பில் இரவு தங்குமிடங்களில் விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கவும், இதனால் அனைத்து இரவு தங்குமிடங்களிலும் செய்யப்படும் ஏற்பாடுகளைக் கண்காணிக்க முடியும் என்று அவர் கூறினார்.
அதேசமயம் இரவு தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள் தரமானதாக இருக்க வேண்டும், தூய்மை, சுத்தமான குடிநீர், விளக்கு வசதி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏழைகளுக்குப் போர்வைகளை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.