ஹைதராபாத் சர்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தொடக்கம்!

ஹைதராபாத் விமான நிலையத்தில் சர்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை இன்று தொடங்கியது.
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை தொடக்கம்!
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை தொடக்கம்!

ஹைதராபாத் விமான நிலையத்தில் சர்வதேச விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை இன்று தொடங்கியது. 

சர்வதேச விமானப் பயணிகளுக்கு ராண்டம் முறையில் கரோனா பரிசோதனை  செய்யும் நடைமுறை இன்று முதல் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை முதல், சர்வதேச விமானப் பயணிகளில் ஒரு சிலருக்கு மட்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை விமான நிலைய ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் சர்வதேசப் பயணிகளிடம் கரோனா பரிசோதனையை இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. 

அதன்படி, சா்வதேச விமானப் பயணிகளில், அனைவருக்கும் என்றில்லாமல், ராண்டம் முறையில் அதாவது, ஒருசிலருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, ஜெட்டாவிலிருந்து காலை 11 மணிக்கு வந்த விமானத்தில் சில பயணிகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 

தற்போதைக்கு மாதிரிகள் சேகரிப்பதற்காக இரண்டு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் கவுன்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகே, பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com