தெலங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் முர்மு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக ஹைதராபாத்துக்கு வந்தடைந்த அவர், தெலங்கானாவின் ஸ்ரீ சைலத்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக ஹைதராபாத்துக்கு வந்தடைந்த அவர், தெலங்கானாவின் ஸ்ரீ சைலத்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலத்திற்கு புறப்பட்டார். ஸ்ரீசைலம் கோயிலுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை ஹைதராபாத் திரும்பும் அவர், டிசம்பர் 30ஆம் தேதி வரை செகந்திராபாத்தில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க உள்ளார். 

கடந்த ஜூலை மாதம் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு தெலங்கானாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, தெலங்கானா பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோர் மற்றும் மூத்த அதிகாரிகள் குடியரசுத் தலைவரை ஆகியோர் முர்முவை வரவேற்றனர்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீசைலம் புறப்பட்டார். ஆளுநர் மற்றும் அமைச்சர் கிஷன் ரெட்டியும் தனித்தனி ஹெலிகாப்டர்கள் மூலம் ஸ்ரீசைலம் புறப்பட்டுச் சென்றனர். 

குடியரசுத் தலைவர் ஸ்ரீசைலம் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசைலம் கோயிலின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அவர் ஹைதராபாத் திரும்புவதற்கு முன், ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுகிறார். 

நாளை(டிச.27) ஹைதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் முர்மு கலந்துரையாடுகிறார். பின்னர், சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகடாமிக்கு சென்று பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். ஹைதராபாத்தில் மிஸ்ரா தாது நிகாம் லிமிடெட் (மிதானி) வின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார்.

நாளை மறுநாள்(டிச.28) பத்ராசலம் ஸ்ரீ சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார். 

மேலும், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் சென்று,  சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் காமேஸ்வராலய கோயிலின் மறுசீரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். 

டிசம்பர் 29ல் ஹைதராபாத்தில் உள்ள பி.எம்.மலானி நர்சிங் கல்லூரியில் ஆசிரியர்களுடன் முர்மு கலந்துரையாடுகிறார். அன்றைய தினம், ஷம்ஷாபாத் ஸ்ரீராம்நகரில் உள்ள சமத்துவ சிலையை அவர் பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com