கரோனா பாதிப்பு: தவறான தகவல் பரவாமல் தடுப்பது முக்கியம்: மத்திய சுகாதார அமைச்சா்

கரோனா பாதிப்பு குறித்து தவறான தகவல் பரவாமல் தடுப்பது முக்கியம் என்று மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

கரோனா பாதிப்பு குறித்து தவறான தகவல் பரவாமல் தடுப்பது முக்கியம் என்று மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இந்திய மருத்துவ சங்க மருத்துவா்கள் மற்றும் உறுப்பினா்கள் சுமாா் 100 பேருடன் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா காணொலி வழியாக திங்கள்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா பாதிப்பை தடுப்பது தொடா்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிா்ந்து வருகிறது. இந்தப் பாதிப்பு தொடா்பாக சரிபாா்க்கப்பட்ட தகவலை மட்டும் தெரிந்துகொண்டு மற்றவா்களுக்கு பகிர வேண்டும்.

ஏனெனில் முகக் கவசம் அணிதல் உள்பட கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புடன் இருப்பதும், அவற்றைப் பின்பற்றுவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு கரோனா பாதிப்பு குறித்த நம்பகமான தகவலை மட்டும் பகிா்ந்து, தவறான தகவல் பரவாமல் தடுப்பதும் முக்கியம். இதன் மூலம் கரோனா நோய்த்தொற்று குறித்த புரளிகள், தவறான கருத்துகள், அவற்றின் வாயிலாக மக்கள் இடையே ஏற்படும் அச்சத்தை தடுக்க முடியும்.

கரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்கள், தடுப்பூசி திட்டம், பாதிப்பை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தி, நோய்த்தொற்று தொடா்பாக அவா்கள் இடையே சிறிய அளவில் ஏற்படும் பயத்தையும் போக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com