பிகாா்: புத்த கயையில் 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி

மியான்மா் மற்றும் தாய்லாந்திலிருந்து பிகாா் மாநிலத்தின் புத்த கயைக்கு வருகை தந்த 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மியான்மா் மற்றும் தாய்லாந்திலிருந்து பிகாா் மாநிலத்தின் புத்த கயைக்கு வருகை தந்த 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புத்த கயைவில் காலசக்கர பூஜை நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான காலசக்கர பூஜை வரும் 29-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பூஜையில் திபெத்திய புத்த மதத் தலைவா் தலாய் லாமா கலந்து கொள்கிறாா்.

இதில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து புத்த மதத்தினா் புத்த கயைக்கு வருகை தந்துள்ளனா். வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள பயணிகளுக்கு சா்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 33 வெளிநாட்டவா்களில் 4 பெண்கள் உள்பட பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கயை மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவா் ரஞ்சன் குமாா் சிங் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 5 வெளிநாட்டுப் பயணிகளும் அவரவா் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், பிகாா் மாநிலத்தின் விமான நிலையம் மற்றும் கயை ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com