ராகுல் காந்தி கடவுள் ராமரைப் போன்றவர்: சல்மான் குர்ஷித்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடவுள் ராமரைப் போன்றவர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
ராகுல் காந்தி கடவுள் ராமரைப் போன்றவர்: சல்மான் குர்ஷித்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடவுள் ராமரைப் போன்றவர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
 ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் உத்தர பிரதேச மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளராக சல்மான் குர்ஷித் இருக்கிறார். இந்நிலையில் அவர் மொராதாபாதில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசினார். அப்போது அவரிடம் ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உத்தர பிரதேசத்தில் அதிக தூரம் மேற்கொள்ளப்படாதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து சல்மான் குர்ஷித் கூறியது:
 ராகுல் காந்தி மனிதர்களிலேயே சிறந்தவர். தற்போது நாம் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறோம். குளிர்காலத்துக்கான ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறோம். அதே வேளையில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்காக டி-ஷர்ட் அணிந்தபடி சென்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு யோகியைப் போன்றவர். அவர் கவனத்துடன் தவமிருந்து வருகிறார்.
 கடவுள் ராமரின் பாதுகை தூரப் பிரதேசங்களுக்கும் செல்கிறது. சில இடங்களுக்கு ராமரால் செல்ல முடியாத போதிலும் அவரது சககோதரர் பரதன் ராமரின் பாதுகையை எடுத்துக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறார். அதேபோல பரதனைப் போன்ற நாம் (காங்கிரஸ் தொண்டர்கள்) தற்போது உத்தர பிரதேசத்தில் பாதுகையைக் கொண்டு வந்துள்ளோம்.
 தற்போது பாதுகை, உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. ராமரும் (ராகுலும்) வருவார். இது நமது நம்பிக்கையாகும் என்றார்.
 சல்மான் குர்ஷித்தின் கருத்துக்கு பாஜக கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா காங்கிரûஸ விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
 பாஜகவின் மற்றொôரு செய்தித் தொடர்பாளர் ஷெஹசாத் பூனாவாலா, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
 அவர்கள் (காங்கிரஸார்) கடவுளிடம் வைக்கும் பக்தியை விடவும், தேசபக்தியை விடவும் ஒரு குடும்பத்தின் மீதான பக்தியை முன்வைக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ராமர் என்று ஒருவர் இருந்தாரா என்று அக்கட்சி கேள்வி எழுப்பியது.
 தற்போது ராமருடன் ராகுலை ஒப்பிட்டு ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றனர். இவ்வாறு ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 இந்நிலையில் பாஜகவின் விமர்சனம் தொடர்பாக சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியது:
 கடவுள் காட்டிய பாதையை ஒருவர் பின்பற்றுகிறார் என்று நான் நம்பினால், நான் என்ன சொல்வேன்? ஒருவர் அத்தகைய உச்சத்தை எட்டினாôல் நீங்கள் அவரை எவ்வாறு புகழ்வீர்கள்? கடவுளுக்கு யாரும் மாற்றாகிவிட முடியாது. ஆனால் அவர் காட்டிய பாதையில் யாரும் நடக்க முடியும்.
 அந்தப் பாதையை ஒருவர் பின்பற்றுகிறார் என்று நான் கூறும்போது யாராவது அதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? பாஜகவால் ஒரு நல்லவரையும் இதுவரை பார்க்க முடியவில்லை என்றால் அது அவர்களின் பிரச்னை.
 வாஜ்பாயின் சமாதிக்கு ராகுல் சென்றது குறித்து கேட்கிறீர்கள். நாங்கள் வாஜ்பாயை மதிக்கிறோம். அதனால்தான் எங்கள் தலைவர் ராகுல் காந்தி, அவரது சமாதிக்குச் சென்றார்.
 பாஜக தலைவர்களின் செயல் மரியாதைக்குரியதாக இல்லை. நம் நாட்டை விரும்புவோரை ஒன்றிணைக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாடுபடுகிறது. அதே வேளையில் வெறுப்பைப் பரப்புவதன மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார்.
 ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நகருக்குள் வரும் ஜனவரி 3-ஆம் தேதி நுழைய உள்ளது. அதைத் தொடர்ந்து பாக்பத், ஷாம்லி பகுதிகளா வழியாக நடைப்பயணம் ஹரியாணாவுக்குள் நுழையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com