புத்தாண்டுக் கொண்டாட்டம்: ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கட்டுப்பாடு

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 9 மணிக்கு மேல் பயணிகள் வெளியேற அனுமதிக்க முடியாது என்றும், அதேவேளையில், கடைசி ரயில் இயக்கப்படும் வரை ரயில் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னௌட் பகுதிக்கு அருகே இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளதால், கேளிக்கை விருந்துகளில் பங்கேற்பவர்களுக்கான இடமாக இது இருப்பதால், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் அதிகமானோர் கூடுவதைத் தடுக்கும் வகையில் இந்தக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com