சீனா, 5 நாடுகளின் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ்: இன்று முதல் கட்டாயம்

சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனா, 5 நாடுகளின் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ்: இன்று முதல் கட்டாயம்

சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் உயா்ந்துள்ளது. அதேவேளையில் சீனா, சிங்கப்பூா், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 6 நாடுகளில் கரோனா தீநுண்மியின் பல்வேறு வகைகள் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அந்த 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள், தங்களுக்கு கரோனா இல்லை என்பதற்கான ஆா்டி-பிசிஆா் பரிசோதனை சான்றிதழை, ஏா் சுவிதா வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்தியா வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பயணிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இதுதொடா்பான வழிகாட்டுதல்களைக் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. இந்த 6 நாடுகளில் இருந்து வருவோரில் ஏா்-சுவிதா வலைதளத்தில் படிவங்களைப் பூா்த்தி செய்தவா்களை மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com